வெள்ளி, 18 ஏப்ரல், 2014

ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோவில் ,ஸ்ரீரங்கபட்டினம்



ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரெங்கநாதர் கோவில் மிகவும் புகழ் வாய்ந்த பெருமாள் கோவில்களில் ஓன்று. இந்த ஊருக்கு ஸ்ரீரங்கபட்டினம் என்று பெயர் வர காரணமே ஸ்ரீ ரெங்கநாதர் கோவில் தான் .தவிர பஞ்சரெங்க க்ஷேத்ரங்களில் இதுவும் ஓன்று .மற்ற நான்கு ரெங்கநாதர் கோவில்கள் தமிழகத்தில் தான் உள்ளது . மற்ற நான்கு ரெங்கநாதர் கோவில்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோவில்,சாரங்கபாணி கோவில் ,கும்பகோணம் ,அப்பக்குடத்தான் கோவில்,திருச்சி ,மயிலாடுதறை அருகில் உள்ள திருவிந்தலூரில்  உள்ள  பரிமள ரெங்கநாதர் கோவில்.இந்த ஐந்து கோவில்களின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இவை ஐந்தும் காவேரி கரை ஓரம் அமைந்த ரெங்கநாதர் கோவில்கள் .

ஸ்ரீரங்கபட்டினம் திப்பு சுல்தானின்   தலைநகரமாக இருந்த பெருமைக்குரியது . இந்த கோவில் தற்பொழுது மத்திய அரசின் தொல் பொருள் கழகத்தின் கட்டுபாட்டில் உள்ளது . ரெங்கநாதர் ஆதி சேஷன் மேல் அனந்தசயனத்தில் உள்ளார் இந்த கோவிலில் .தாயார் திருநாமம் ரெங்கநாயகி .மிகவும் அருமையான விஜயநகர காலத்தை சேர்ந்த சிற்ப கலை இந்த கோவிலில் உள்ளது . மூல ஸ்தானத்திற்கு செல்லும் முன்பு ஒரு மண்டப வாயில் உள்ளது .அந்த மண்டப வாயிலின் மேல் விஷ்ணுவின் அருமையான சிலைகள் மேல் புறத்தில் உள்ளது .மகர  சங்கராந்தி அன்று இந்த கோவிலில் லக்ஷதீப உற்சவம் நடைபெறும் .அன்று லக்ஷதீபம் ஏற்றுவார்கள் . வெங்கடேஸ்வரர் ,நரசிம்ஹர் ,மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிகளும் இந்த கோவிலில் உள்ளது .

இந்த கோவிலுக்கு அருகில் திப்பு சுல்தானின் உடல் அடக்கம் செய்த இடம் உள்ளது . அது போல நிமிஷாம்பாள் கோவில் போகும் வழியில் திப்பு சுல்தான் கோடை காலத்தில்  தங்கும்    தாரியா டௌலட் பாக் என்ற இடமும் உள்ளது .

1 கருத்து:

Ranjani Narayanan சொன்னது…

பஞ்ச ரங்கஷேத்ரம் பற்றி இன்று தான் கேள்விப்படுகிறேன். இந்த எல்லாக் கோவில்களுக்குப் போயிருந்தாலும், இவைகளுக்கு பஞ்ச ரங்கஷேத்ரம் என்று பெயர் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள், ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில், பெருமாள் பற்றி. பாராட்டுகள்!