வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தொட்டமல்லூர் நவநீத கிருஷ்ணன் கோவில்


மிகவும் பிரசித்தி பெற்ற தொட்டமல்லூர் நவநீத கிருஷ்ணன் கோவில் பெங்களூரில் இருந்து மைசூரு செல்லும் பாதையில் சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது ..பெங்களூரு மைசூரு நெடுஞ்சாலையில் சென்னபட்டினம் தாண்டி சுமார் 4 கி.மீ தொலைவில் நெடுஞ்சாலையிலேயே நவநீத கிருஷ்ணன் கோவில் தோரண வாயில் காணலாம் . இது ஒரு பெருமாள் கோவில் . ராமப்ரேயா சுவாமி என்பது பெருமாள் பெயர் . தாயார் பெயர் அரவிந்தவல்லி .இந்த பகுதியில் இந்த பெருமாள் கோவில் அப்ரமேயச்வாமி கோவில் என்று தான் பிரபலமாக அறியபடுகிறது .இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு உள்ள தவழும் நவநீத கிருஷ்ணன் சன்னதி தான் . இங்கு வந்து தரிசனம்  செய்தால் புத்திர தோஷம் மற்றும் சயன தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை .

 பிரார்த்தனை நிறைவேறியவர்கள் மரத்தாலான மற்றும் வெள்ளியிலான தொட்டில்களை இங்கு காணிக்கையாக செலுத்துக்கிரார்கள் .இந்த ஊருக்கு வேறு சில பெயர்களும் உள்ளது .தகிஷ்ண அயோத்தியை ,சதுர் வேத மங்களபுரம் , ராஜேந்திர சிம்ஹ நகரி என்றாலும் பெயர்கள் இருந்திருக்கிறது . தவழும் கிருஷ்ணனுக்கு கன்னடத்தில் 'அம்பேகள்' கிருஷ்ணன் என்று சொல்கிறார்கள் .

ஸ்தலபுராண கதை படி சாரங்கதரன் என்ற ராஜாவின் கால்களை எதிரிகள் துண்டித்துவிட்டு இந்த ஊரின் அருகில் ஓடும் நிர்மலா நதி கரையில் எறிந்து  விடுகிறார்கள் .வலி தாங்காமல் ராஜ இந்த ஊர் பெருமாளை வேண்டுகிறார் .பெருமாள் ராஜாவுக்கு திவ்ய தரிசனம் தந்து முறிந்த கால்களை மீண்டும் முளைக்க வைக்கிறார்.அப்படி தான் இந்த ஊருக்கு முளைத்தூர் என்ற தமிழ் பெயர் வந்தது . காலபோக்கில் அந்த பெயர் மருவி மல்லூர் என்றாகிவிட்டது .

இந்த கோவில் கிட்டத்தட்ட 3000 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் என்று சொல்ல படுகிறது .ராம பிரான் இங்கு தங்கி அப்ரமேய சுவாமிகளை தரிசனம் செய்துள்ளதாக சொல்லபடுகிறது . ராமன் வணங்கிய அப்ரமேய பெருமாள் என்பதால் கோவிலுக்கு ராமப்ரமேய சுவாமி கோவில் என்று பெயர் வந்தது . ராமன் வணங்கியதால் தான் மல்லூர் தக்ஷின அயோத்தி என்று அறியபடுகிறது .ராமானுஜர் இங்கு விஜயம் செய்துள்ளார். புரந்தரதாசரரின் மிகவும் பிரபலமான 'ஜகதோத்தாரா' மல்லூர்  நவநீத கிருஷ்ணனை குறித்து பாடிய கீர்த்தனை .இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு ஒரு பெரிய மணல் பரப்பில் தான் இந்த கோவிலின் அடித்தளம் உள்ளதாக சொல்லபடுகிறது. கெட்டியான அடித்தளத்தில் இந்த கோவில் எழுப்பப்படவில்லை என்று சொல்லபடுகிறது .

இந்த கோவிலில் பெருமாள் ,தாயார் ,கிருஷ்ணன் சன்ன்னதிகள் தவிர வைகுந்தநாத சுவாமி ,ஆழ்வார்கள் ,ராமானுஜர் ,கூரத்தாழ்வார் ,வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள முனிகளுக்கு தனி சன்னதிகள் உள்ளது .காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் ,மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும் .





1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறியாத கோயிலின் தகவலுக்கு நன்றி...