செவ்வாய், 17 செப்டம்பர், 2013

அரங்கநாதசுவாமி கோவில் -திருவரங்கம்


திருவரங்கம் என்று அறியப்படும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவில் மிக முக்கியமான விஷ்ணு ஸ்தலங்களில் ஒன்று . 108 திவ்யதேச க்ஷேத்ரங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் கோவில்.திருவரங்கம் பூலோக வைகுண்டம் என்றும் அறியபடுகிறது . திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு தீவு தான் .ஸ்ரீரங்கம்..ஒரு புறம் காவேரியும் மறுபுறம் கொள்ளிடம் நதியும் ஓட இடைபுறம் உள்ள நிலபரப்பு தான் ஸ்ரீரங்கம் .இந்த நகரம் ஏழு சுற்று மதில்களுக்கு நடுவில் அமைந்துள்ளது . இந்த மதில்களுக்கு நடுவில் 600 ஏக்கர் பரப்பளவில் உள்ளது . இந்த மதில்களில் 21 கோபுரங்கள் உள்ளது .இந்த கோவிலின் விமானத்திற்கு ஒரு வரலாற்று கதை உள்ளது .ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார்.விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறுது நேரம் இளைப்பாறினான்.மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான்.ஆனால் விமானத்தை எடுக்க முடியவில்லை.அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார் .பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.இது தான் ஸ்ரீரங்கம் தலவரலாறு .மூலவருக்கு நாமம் ரங்கநாதர் . உற்சவருக்கு நாமம் நம்பெருமாள் . தாயார் பெயர் ரங்கநாயகி .இந்த கோவிலில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வார் சன்னதி உள்ளது .கருட பஞ்சமியன்று இங்கு விசேஷ பூஜை நடக்கும்.அன்னப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர்இடதுபுறம் நரசிம்மர் உள்ளது.ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார்.மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் .இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர்.

இந்த கோவிலில் உள்ள ஏழு மதில் சுவர்களையும் ஏழு உலகங்கள் என்று பக்தர்கள் நம்புகிறார்கள் . மிகவும் பழமை வாய்ந்த கோவில் இது. இக்கோவிலின் பழமைக்கு ஒரு சான்று சிலபதிகாரத்தில் கூட ஸ்ரீரங்கம் கோவில் குறித்த உள்ள குறிப்பு தான் . கம்ப ராமாயணத்தில் கூட திருவாரங்கம் குறித்து குறிப்புகள் உள்ளது.கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தகாக சொல்லபடுகிறது .கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் கோவிலில் உள்ளது. இன்னொரு சான்று 5 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த 11 ஆழ்வார்களும் திருவரங்கதானை குறித்து பாடியுள்ளார்கள் . சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில்கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தரு ளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார்.
 

வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் .ஆடிப்பெருக்கு விழாவும் ஸ்ரீரங்கத்தில்கொண்டாடப்படுகிறது.அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தரு ளுகிறார். அங்கு காவிரி தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும்.இந்த பொருட்களை ஆற்றிற்குள் மிதக்க விடுவார்கள்.வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது. கார்த்திகை வளர்பிறை ஏகாதசியன்று இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது.ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, ஆதி பிரம்மோற்ஸவம் என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி ரங்கநாயகி தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார்.மோட்சம் தரும் தலம் இது என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும்.

2 கருத்துகள்:

ADHI VENKAT சொன்னது…

அன்புடையீர்,

உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_11.html

தங்கள் தகவலுக்காக!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான ஆலய தரிசனம் பாராட்டுக்கள்..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!